ஹோட்டல் ரூமில் அடி வாங்கிய அஜித்!! கோபத்தில் பிரபல இயக்குனர் செய்த காரியம்.... Beaten Ajith in Hotel Room..

Tamil Status avatar   
Tamil Status
Beaten Ajith in Hotel Room - ஹோட்டல் ரூமில் அடி வாங்கிய அஜித்!! கோபத்தில் பிரபல இயக்குனர் செய்த காரியம்......

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது துணிவு படத்தில் நடித்து வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தற்போது அஜித் பற்றி சில விசயங்கள் இணையத்தில் பலர் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி நான் கடவுள் படத்தில் இயக்குனர் பாலா கதையை கூறும் போது அஜித்தை அடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விசயத்தை சினிமாவில் விமர்சகர் செய்யார் பாலா சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் இருக்கிற Palmgrove ஹோட்டலில் நான் கடவுள் கதையை கூற பாலா அஜித்தை அழைத்திருக்கிறார். அங்கு பாலாவுடன் மூன்று பேர் இருக்கும் நிலையில், அஜித் கதையை ஒரு லைன் அப் கேட்டிருக்கிறார். அகோரிகள் கதை என்று பாலா கூற, தன் பாணியில் எடக்குமுடக்காக கூறியிருக்கிறார்.

அஜித் முடியில் ஆரம்பித்து பேசிய நிலையில், அஜித் அப்செட்டாகி வேண்டாம் என்று எழுந்திருக்கும் போது பின்னால் இருந்தவர் அஜித்தை முதுகில் தட்டி உட்கார வைத்திருக்கிறார்.

நீ என்ன பெரிய ஹீரோவா என்று கேட்டது அஜித் வெளியில் வந்ததும் 20 நாட்கள் யாரையும் பார்க்காமல் அவமானத்தில் இருந்துள்ளார்.

இதுகுறித்து பாலா எனக்கு ஒன்னும் தெரியாது, எனக்கு தெரிந்த அபிமானி ஒரு சின்ன தட்டு தட்டினார் என்று கூறியதாக செய்யார் பாலா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments found