Tamil Kadhal Kavithaigal Collection from Tamil Love Status

Best Tamil Kadhal Kavithaigal added on whatsapp status lobby of Tamil Status for who looking latest and new kavithikal for young and cute lovers.
Tamil Kadhal Kavithaigal Collection from Tamil Love Status

வம்பான பார்வையை அம்பாக எய்கின்றாய்



நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடிகள் இல்லை கேட்கிறேன் இதய துடிப்பில் ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காக அல்லவா



மனமும் மகிழ்வில் உன் விழிகளில் என்னை காண்பதால்



என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால் அங்கும் வந்துவிடுகிறாய் நானே... உன் உலகமென்று



கொஞ்சும் மொழியில் கெஞ்சும் உன் வார்த்தைகளில் என் கோபங்களும் மறைந்து விடுகிறது



மழைச்சாரலாய் நீவர கவிச்சோலையானேன் நான்...!



மனதிலிருக்கும் ஆசைகளையெல்லாம் கொட்டி தீர்த்தவன் அயர்ந்து போனான் குழந்தையாய்...!



காற்றோடு பேசும் மலராய் உன் மனதோடு பேசி கொண்டிருக்கின்றேன் நான்...!



நான் மறைந்தாலும் உன் மனதில் மறக்கப்படாதளவுக்கோர் அழகிய வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும்



பார்க்க மறுத்த விழிகளும் காத்துக்கிடக்கு உன்னன்பில் தொலைந்து...!



இடைவெளி வலியை தருமென தெரிந்தும் பிடிவாதமாய் அனுபவித்திருக்கிறோம் இருவரும்...!



விடைப்பெறட்டும் நாணம் விடைத்தருகிறேன் நானும் உன் பார்வையின் கேள்விக்கு



Comments 0 forum

No comments found